போதிய பயணிகள் இல்லாமல் 4 விமானங்கள் திடீர் ரத்து... பயணிகள் கடும அவதி!

 
விமானம்

போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில்   இன்று 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து இன்று காலை 5.35 மணிக்கு சென்னை வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.  லண்டன், ஐதராபாத் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

விமானம்

இதேபோல் காலை 7.45 மணிக்கு சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு காலை 11.10 மணிக்கு வரவேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போதிய பயணிகள் இல்லாமலும் மற்றும் நிர்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விமானம்
இதையடுத்து சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் கோளாறு காரணமாக  விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானம் பழுது பார்க்கப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.  உரிய நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறை கண்டுபிடித்ததால் 142 பயணிகள் உயிர் தப்பியதாக விமானி தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?