40000 பணியிடங்கள் !! மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!!

 
 வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்கள் எண்ணிக்கையும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை சீராக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்ட நிர்வாகமும், தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும்  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 26ம் தேதி  நடைபெற இருக்கிறது.

வேலைவாய்ப்பு பதிவு


இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உட்பட  முக்கிய துறைகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட முன்னணி  நிறுவனங்கள் 40,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுடன் காத்துக்கிடக்கின்றன. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற இருக்கும் இம்முகாமில் 8ம் வகுப்பு., 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலை வாய்ப்பு முகாம்
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என  சேலம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு  jobfairmccsalem@gmailcom என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண் மூலமாகவும்  தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web