ஆண்டிப்பட்டி அருகே தலைக்குப்புற கவிழ்ந்த சொகுசுப் பேருந்து - 41 பேர் படுகாயம்!
தேனி மாவட்டம் போடியிலிருந்து நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று மதுரை நோக்கிப் புறப்பட்டது. மதியம் 12 மணியளவில் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே பேருந்து வந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
திருமங்கலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வடுகபட்டி நோக்கிச் சென்ற கார் ஒன்றின் மீது, மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர மரத்தில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் பேருந்தின் பெரும் பகுதி நொறுங்கியது.

விபத்தில் சிக்கிய பயணிகள் உள்ளே அலறியதைக் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் மொத்தம் 41 பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகளும், காரில் இருந்த 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
காயமடைந்த அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அசோக்குமார், கணேஷ்ராம், போஸ், ராமையா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த ஆண்டிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தைச் சீர்செய்தனர். பேருந்து மற்றும் கார் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
