பகீர்... பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதலில் 42 பொதுமக்கள் பலி !
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லை தாண்டிய தாக்குதல்கள் பல மாதங்களாக நீடித்து வந்தன. இந்த நிலையில், ‘ஆபரேஷன் காஸாப் லில் ஹக்’ என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் மீது நேரடி ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்த நடவடிக்கையில் இதுவரை சுமார் 352 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை ஐந்து நாட்களில் 42 பொதுமக்கள் உயிரிழந்ததாக United Nations Assistance Mission in Afghanistan இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. போர் நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருநாட்டு அரசுகளும் பதற்றத்தை குறைத்து தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் வலுத்துள்ளது. மோதல் நீடித்தால் பிராந்திய அமைதி கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
