உணவு பற்றாக்குறை, பசி , பட்டினியால் 43000 பேர் பலி!! அதிர்ச்சி தரும் தகவல் அறிக்கை!

 
சோமாலியா

 மிக நீண்ட நெடுங்காலமாக சோமாலியாவில் பஞ்சம் ஏற்பட்டு  அங்குள்ள மக்கள் பசி , பட்டினியால் வாடி வருகின்றனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என அதிர்ச்சி தரும் தகவல் அறிக்கை கூறுகிறது.  ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள  பெரும் நிலப்பரப்புகளில் ஏற்பட்டுள்ள பஞ்சம் குறித்து வெளியான முதல் அறிக்கை இது என்பது  குறிப்பிடத்தக்கது. அந்த புள்ளி விபரப்படி நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில்  18000 முதல் 34000 பேர் வரை பஞ்சத்தால் மரணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் அறிக்கையை உலக சுகாதார மையம், ஐ.நாவின் குழந்தைகள் முகமை மற்றும் சுகாதாரம், வெப்பமண்டல மருத்துவத்துக்கான லண்டன் கல்விநிலையம் இணைந்து வெளியிட்டுள்ளது.

சோமாலியா
இதற்கு மிக முக்கிய காரணமாக அறியப்படுவது சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளில்  தொடர்ந்து 6 பருவங்களுக்கு மழைப் பொய்த்துள்ளது. வரலாறு காணாத வறட்சிக்கும், உணவு பற்றாக்குறைக்கும்,  பசி, பட்டினி சாவுகளுக்கும் இதுவே முதன்மை காரணம். அத்துடன் உலகாளவிய அளவில் உணவுப்பொருட்கள் விலையேற்றமும் உக்ரைன் போரும் கூட ஒரு காரணமாக அமைந்துள்ளது.  சோமாலியா உணவுப் பற்றாக்குறையின் முக்கிய காரணங்களாகும். சோமாலியாவில் மட்டும் சுமார்  60 லட்சம் மக்கள்  உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை மிகவும் எதிர்கொள்வது மிகவும் கடினமான சூழல் என  ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் அளித்துள்ளது. பஞ்சத்தினால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால் பசியால் குழந்தைகள் குவியல், குவியலாக செத்து மடிகின்றனர். அத்துடன் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் காலரா போன்ற நோய்களின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.  

சோமாலியா

சோமாலியா குழந்தைகளில் ஒவ்வொரு நாளும் 10000த்தில் இரண்டு பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்து வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 2011ல் ஏற்பட்ட பஞ்சத்தின் போது சுமார் 2,50000குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது நிலவும் பஞ்சம் அதை விட மோசமானதாக இருக்கக் கூடும் என காலநிலை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கொடூரத்தில் அல்கொய்தாவின் கிழக்கு ஆப்ரிக்க அமைப்பான அல்-ஷபாப் உடன் சோமாலியா நீண்டகாலமாக சண்டையிட்டு வருவதும் ஒரு காரணமே.  இதனால் சோமாலியாவிலிருந்து 38 லட்சம் மக்கள் வேறுநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். கடந்த  மாத தகவல் அறிக்கைப்படி , சோமாலியாவில் மட்டும் சுமார்  50 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்கிறது அறிக்கை.  சோமாலியாவுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருந்த பல அமைப்புக்கள் தற்போது உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் திரும்பி விட்டது. இதனால் திக்கு திசை தெரியாமல் தவித்து வருகிறது சோமாலியா.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web