காலக்கெடு நிறைவு!! பொது சிவில் சட்டத்திற்கு 46 லட்சம் பேர் கருத்து!!

 
பொதுசிவில் சட்டம்


நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒரே பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று மத்திய பாஜக அரசு விரும்புகிறது. இதற்கான நடவடிக்கையில் களம் இறங்கி உள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான கலந்தாலோசனையை இப்போதுள்ள 22வது தேசிய சட்டக்கமிஷன் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள், மதஅமைப்புகள் என தொடர்புடைய அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துகளை வரவேற்று சட்ட கமிஷன் கடந்த மாதம் 14ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதில் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவவதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.

பொதுசிவில் சட்டம்


இதற்கிடையே கடந்த மாதம் 27ம்தேதி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜ தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட் டம் இயற்றப்படுவது அவசியம் என வலியு றுத்தினார். மேலும், 'ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தனித்தனியான சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் அந்த குடும்பம் எப்படி இயங்க முடியும்?' எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

பொதுசிவில் சட்டம்


இந்த நிலையில், நேற்று மாலைவரை பொது சிவில் சட்டம் தொடர்பாக 46 லட்சம் கருத்துருக்கள் சட்டக் கமிஷனால் பெறப்பட்டுடுள்ளதாக தெரியவந்துள்ளது. இனி வரும் நாட்க ளில் குறிப்பிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை சட்டக்கமிஷன் நேரில் வரவழைத்து தனிப்பட்ட முறையில் கருத்துகளைப் பெறும் என்றும் இது தொடர்பாக அவர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web