தேர்தல் நெருங்குகையில் அதிரடி: தூத்துக்குடியில் 46 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்!

 
தூத்துக்குடி எஸ்.பி. சிலம்பரசன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான முன்னேற்பாடுகள் இப்போதே தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, ஒரே மாவட்டத்தில் நீண்ட காலம் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளின்படி குறிப்பிட்ட காலக்கெடுவை நிறைவு செய்துள்ள காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

மாவட்ட எஸ்.பி. வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள சில முக்கிய மாற்றங்களில், தூத்துக்குடி கன்ட்ரோல் ரூம் SI விஜயகுமார் தருவைகுளத்திற்கும், முறப்பநாடு SI விக்டோரியா அற்புதராணி கன்ட்ரோல் ரூமிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் ...டிஐஜி  திடீர் உத்தரவு.!

ஸ்ரீவைகுண்டம் SI ரேணுகா குலசேகரன்பட்டினத்திற்கும், குலசேகரப்பட்டினம் SI முகேஷ் அரவிந்த் புதுக்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஆறுமுகநேரி SI ராமகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டத்திற்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் SI ராமலட்சுமி அதே ஊர் தாலுகா காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி மேற்கு SI செந்தில்குமார் கோவில்பட்டி கிழக்கிற்கும், கோவில்பட்டி கிழக்கு SI சண்முகம் கோவில்பட்டி மேற்கிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் SI மாரியம்மாள் - மெஞ்ஞானபுரத்திற்கும், கோவில்பட்டி அனைத்து மகளிர் SI காயத்ரி - செய்துங்கநல்லூருக்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் SI அனுசுயா - தெர்மல்நகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!