சென்னையில் ஜனவரி 7 முதல் 19 வரை 49வது புத்தகக் கண்காட்சி…!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 49வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. வழக்கம்போல் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஜனவரி 7ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை புத்தகக் காட்சி நடக்கிறது.

இந்த ஆண்டு 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. பொங்கல் விடுமுறையை கருத்தில் கொண்டு கண்காட்சி காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார நாள்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.

இதற்கிடையில், சென்னையில் நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தகக் காட்சிக்கான இலட்சினையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
