பள்ளி கழிவறையில் பதுக்கிய மதுவை குடித்த 4-ம் வகுப்பு மாணவன் - பீகாரில் பரபரப்பு!

 
bihar bihar

 

பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள போதிலும், சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயக் கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த வாரம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், பள்ளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுவைக் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்குச் சென்ற சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.

பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறுவனின் நடை மற்றும் பேச்சில் மாற்றம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறையில் வைக்கப்பட்டிருந்த மதுவை எடுத்து அருந்தியதை அந்தச் சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளான். போதை முற்றிய நிலையில் சிறுவனின் உடல்நிலை மோசமடையவே, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது உயிர் பிழைத்துள்ளார்.

இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நடத்திய சோதனையில் கழிவறையிலிருந்து 23 அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் வெளிநாட்டு மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. தகவல் அறிந்து வந்த பச்வாரா போலீசார், மதுவைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளிக் கூடத்தை மதுக் கிடங்காக மாற்றியது யார்? இதில் பள்ளி ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவிலக்கு அமலில் உள்ள ஒரு மாநிலத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கே மது எளிதாகக் கிடைக்கும் அவலம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!