ஓடும் காரில் மான் மோதியதில் 4 வயது சிறுமி பலி!

 
மான்
 

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் ஓடும் காரின் மீது மான் மோதியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மகர சங்கராந்தி பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்ற போது இந்த கோர விபத்து நடந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குணா பைபாஸ் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, சாலையை கடக்க இரண்டு மான்கள் திடீரென ஓடிவந்தன. அதில் ஒரு மான் காரின் முன் கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்தது. தாயின் மடியில் இருந்த சிறுமியின் தலையில் மானின் கால்கள் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் சிறுமியின் பெற்றோர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர், காரில் சிக்கியிருந்த மானை மீட்டனர். வனப்பகுதி அருகே உள்ள சாலைகளில் விலங்குகள் திடீரென குறுக்கிடுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!