5 நாட்களில் 18 லட்சம் பேர் பயணம்! இன்றும் தொடரும் படையெடுப்பு... கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள்!

 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள்

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். ஆனால், அந்த வழியைக் காணச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில் இன்று மக்கள் பெரும் கூட்ட நெரிசலைச் சந்தித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 9-ம் தேதி தொடங்கிய இந்தப் பொங்கல் பயணப் பெருவிழா, இன்று உச்சத்தை எட்டியுள்ளது.

மக்கள் எப்போதும் விரும்பும் ரயில் பயணத்தில், கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 7 லட்சத்து 5 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். சிறப்பு ரயில்கள் பல இயக்கப்பட்டாலும், அனைத்துப் பெட்டிகளிலும் மக்கள் ஒற்றைக் காலில் நின்று பயணிக்கும் அவலநிலை காணப்பட்டது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் நிலையங்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடம்பிடிக்கப் பயணிகளிடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

பேருந்து

பேருந்து பயணத்தைப் பொறுத்தவரை, அரசுப் போக்குவரத்துத் துறை 38,000-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதுவரை சுமார் 6 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகள் மூலம் பயணித்துள்ளனர்.

தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் கடந்த 5 நாட்களில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 800 பேர் பயணித்துள்ளனர். நேற்று (ஜனவரி 13) ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 74,400 பேர் ஆம்னி பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ரயில் மற்றும் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் தங்களது சொந்தக் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் செங்கல்பட்டு பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!