ஒரு நாள் போட்டியில் 5 சதங்கள்!! வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர்!!

 
ஜெகதீசன்

உள்நாட்டு ஒரு நாள் தொடர் விஜய் ஹசாரே கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசியிருந்தார். இன்று அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 5வது சதமடித்து சாதனை படைத்துள்ளார்.  இந்த சதங்களில் ஆந்திராவிற்கு எதிராக 114 ரன்கள், சத்தீஸ்கருக்கு எதிராக 107 ரன்கள், கோவாவுக்கு எதிராக 168 ரன்கள், ஹரியானாவுக்கு எதிராக 128 ரன்களும் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசியிருந்தார்.

ஜெகதீசன்

இன்று அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக தமிழகம் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற  தமிழகம் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியின் தொடக்க வீரர்கள் நாராயண் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன்  இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர். இதில் சாய் சுதர்சன் 154 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இரட்டை சதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடி 277 ரன்களை குவித்தார். ஜெகதீசன் இரட்டை சதத்தால் தமிழக அணி 50 ஓவரில் 506 ரன்களை குவித்து சாதனை படைத்தது.

ஜெகதீசன்

இந்த இரட்டை சதத்தின் மூலம் வரலாற்று சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன் சங்கக்கரா, ஆல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் மூவரும் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்து இருந்தனர். அந்த சாதனையை ஏற்கனவே சமன் செய்த ஜெகதீசன், தொடர்ச்சியாக 5வது சதத்தை அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web