ஒரே நாளில் ரூ5.5 கோடி உண்டியல் காணிக்கை... திருப்பதி தேவஸ்தானம் அதிரடி...!

 
திருப்பதி

இந்தியா முழுவதும் விஷ்ணு ஆலயங்களில் டிசம்பர் 23ம் தேதி வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  சொர்க்கவாசல்  திறக்கப்பட்டு ஜனவரி 1ம் தேதி  நள்ளிரவு 12 மணி வரை   சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

ஏற்கனவே ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  இதற்காக திருப்பதியில் 9 இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு 4.25 லட்சம் இலவச சர்வ தரிசன டோக்கன்கள்  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இன்று பிற்பகலுக்கு இலவச டோக்கன்கள் வழங்கும் கவுண்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.  இலவச டோக்கன்கள் பெறுவதற்காக பக்தர்கள் யாரும் திருப்பதிக்கு வர வேண்டாம்.

திருப்பதி

எந்த வித தரிசன டோக்கன்களும் திருப்பதி மற்றும் திருமலையில் வழங்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய வரலாம்.  வைகுண்ட துவாதசியான நேற்று காலை  முதல் இரவு வரை 63,519 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள்  தலைமுடி காணிக்கை செலுத்தினர்.  நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ.5.05 கோடி  என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web