தமிழகம் முழுவதும் 5 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உட்பட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலம் மக்களை சென்றடைகிறது.
ரேஷன் கடைகள் மூலம் 2.21 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் நிலையில் விரைவில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளின் விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜூலை மாதத்தில் மொத்தம் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை. வழக்கம்போல் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. இதனையடுத்து கடைசி 2 ஞாயிற்றுக்கிழமை, மொஹரம் பண்டிகை இவைகளை முன்னிட்டு மொத்தம் 5 நாட்களுக்கு விடுமுறை. மேலும் அதன்படி ஜூலை 4, 6, 11, 20, 27 தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் இதனை கணக்கிட்டு முன்கூட்டியே பொருட்களை பெற்று பயனடையும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!