பிளஸ் 2 கணித தேர்வில் தவறான கேள்விக்கு 5 கருணை மதிப்பெண்.. மாணவர்கள் உற்சாகம் !

 
மாணவிகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக இந்த பொதுத்தேர்வை எழுதினர். இதில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாளில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற 47-பி கேள்வி தவறானதாக இருந்தது. அதாவது பொருத்தமற்ற வகையில் ‘ஒரு நீள்வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவான பரப்பினைக் காண்க’ என்று கேட்கப்பட்டிருந்தது. 

இந்த கேள்வி தவறானது என்றும், இதற்கு கருணை மதிப்பெண் வழங்கவும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தேர்வுத் துறை மறுப்பு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் தமிழக அரசின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. 

மாணவிகள்

இதையடுத்து கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை தற்போது முன்வந்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விடைக்குறிப்பில், பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற தவறான 47-பி கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது மாணவர்கள் கண்டிப்பாக 47-பி கேள்வியை எழுதியிருக்க வேண்டும். சரியோ அல்லது தவறோ 47-பி கேள்வியை அட்டன் பண்ணியிருந்தால் அவர்களுக்கு 5 மதிப்பெண் கிடைக்கும். பிளஸ் 2 கணிதப் பாட வினாத்தாள் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் அறிவிப்பு மாணவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள்

இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைக்குறிப்புகள் சமூகவலை தளங்களில் வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web