காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 5 பேர் படுகாயம் - வீடுகள் சேதம்!

 
சிலிண்டர் வெடி த்து

மும்பை தானே மாவட்டம் நவனீத்நகர் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.  இப்பகுதியைச் சேர்ந்த கீட்டன் டெல்கியா (35) என்பவர் இரவு வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பசியில் இருந்த அவர், சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பைப் பற்றவைக்க முயன்றுள்ளார்.

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து!

அடுப்பைப் பற்றவைத்த அடுத்த நொடியே, எதிர்பாராத விதமாக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தின் அதிர்வால் கீட்டனின் வீடு மட்டுமின்றி, அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. சிலிண்டர் வெடித்ததில் கீட்டன் மற்றும் அருகில் இருந்தவர்கள் என மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!