பட்டப்பகலில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 5 கிலோ தங்கம் கொள்ளை... பெரும் பரபரப்பு!
மைசூரு அருகே ஹன்சூர் பகுதியில் பட்டப்பகலில் நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர்கள் 5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்த துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைக் கடைக்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி, குறுகிய நேரத்தில் தங்க நகைகளை கைப்பற்றி தப்பியதாக கூறப்படுகிறது. பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த போதும், துணிச்சலாக இந்த கொள்ளை நடத்தப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு சவாலாக மாறியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மைசூரு மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் சென்ற வழித்தடங்களை மையமாக வைத்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
