உஷார்... லிங்கை க்ளிக் செய்ததால் ரூ.5 லட்சம் அபேஸ்.. இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

 
ரகுராம்

சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்த ரகுராம்(40) என்பவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. 

பின்னர் சிறிது நேரத்தில் ரகுராமை புதிய தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்புகொண்ட ஒருவர், பிரபல தனியார் வங்கியின் மேலாளர் பேசுகிறேன். உங்களுக்கு வந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்கை தொட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம், புதிய பரிசுகள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

ரகுராம்

காவல்துறை எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சிறிதும் யோசிக்காத ரகுராம், அந்த லிங்கை கிளிக் செய்தார். அவ்வளவு தான், அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்து ரகுராம் கடும் அதிர்ச்சி அடைந்தார்.  உடனடியாக இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இந்த புகாரை அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

ரகுராம்

இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆன்லைன் வாயிலாகவோ, செல்போன் மூலம் குறுந்தகவல் வந்தாலோ எந்தவொரு லிங்க்கையும் தொட்டு பார்க்க கூடாது. இதனை,  பலமுறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்துள்ளோம். செய்தும் வருகிறோம். வங்கியின் மேலாளர் பேசுவதுபோல் பேசி தற்போது பணம மோசடி செய்துள்ளனர். எனவே ஆன்லைன் வாயிலாக வரும் குறுந்தகவல் மற்றும் லிங்கை தொடவேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும், என்றனர். 

செல்போன் எண்ணுக்கு வந்த லிங்கை கிளிக் செய்த்தால் 5 லட்சம் ரூபாய் பறிபோன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!