உச்சநீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

 
judge

நாட்டில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 5 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

supreme court

அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், மத்திய சட்டத்துறை அமைச்சர கிரண் ரிஜிஜூ மற்றும் உச்சநீதிமன்ற  இடையே வார்த்தை போர் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு கடந்த 4ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதன்படி பங்கஜ் மித்தல், சஞ்சய் கரோல், அசானுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா, பி.வி. சஞ்சய் குமாா் ஆகியோர் பதவியேற்றனர். புதிய நீதிபதிகள் 5 பேருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

supreme court

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது 27 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனா். புதிய நீதிபதிகள் பதவியேற்ற நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web