திருமண வீட்டினரை ஏற்றிச் சென்ற ஜீப் பள்ளத்தில் பாய்ந்து 5 பேர் பரிதாபப் பலி!
உத்தரகண்ட் மாநிலம் லோஹாகாட் அருகே திருமண விழாவிலிருந்து வீடு திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியானனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு பரகோட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்து தகவலறிந்ததும் போலீஸ் மற்றும் மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தொடர்ந்து பல மணி நேரம் போராடி அனைவரையும் மீட்டனர். ஆழமான பள்ளத்தில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியானவர்கள்:
பிரகாஷ் சந்த் உனியல் (40), கேவல் சந்திரா உனியல் (35), சுரேஷ் நௌடியல் (32), பவ்னா சௌபே (28) மற்றும் அவரது 6 வயது மகன் பிரியான்ஷு சௌபே.

காயமடைந்தவர்கள் லோஹாகாட் துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக hospital அதிகாரிகள் தெரிவித்தனர்.பேரிடர் கட்டுப்பாட்டு நிர்வாகம் விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
