7ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை... 5 ஆசிரியா்கள் கைது!
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. 13 வயது 7ம் வகுப்பு மாணவியை தொடர்ந்து தவறாக நடந்து கொண்டதாக கூறி அந்தப் பள்ளியின் 5 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் வெளியானதும் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவி தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவரது தந்தை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவை அணுகினார். அவர்கள் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. பின்னர் ராஜ்கனிகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து 5 பேரையும் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து தனியாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிஜ்ஜு ஜனதா சார்பில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தீர்மானமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
