வாரிசு சான்றுக்கு ரூ.5000 லஞ்சம் வாங்கிய VAO... கையும் களவுமாக கைது!
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த பிரபு (42), வாரிசு சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். வைரபெருமாள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமியின் தாயார் கடந்த டிசம்பர் 7-ம் தேதி உயிரிழந்த நிலையில், வாரிசு சான்றுக்காக அவர் டிசம்பர் 24-ம் தேதி இணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதுதொடர்பாக டிசம்பர் 31-ம் தேதி VAO பிரபுவை சந்தித்த கந்தசாமியிடம், சான்று பரிந்துரை செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் தொகையை ரூ.5 ஆயிரமாக குறைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கந்தசாமி, ஜனவரி 2-ம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அதன்பேரில், இன்று ஊழல் தடுப்பு போலீசார் பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இரசாயனம் தடவப்பட்ட ரூ.5 ஆயிரத்தை VAO பிரபு பெற்றுக் கொண்டபோது, பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து பிரபு கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
