அமெரிக்கா குடியேற்ற சோதனையில் 5 வயது சிறுவனையும் தந்தையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

 
america america
 

மின்னசோட்டா மாகாணத்தில் குடியேற்றச் சோதனையில் கைது செய்யப்பட்ட 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ் மற்றும் அவனது தந்தை அட்ரியன் அலக்சாண்டா் உடனடியாக விடுவிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மினியாபொலிஸ் பகுதியில் நடந்த குடியேற்றச் சோதனைகளில், 4 பள்ளி மாணவர்கள் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்தச் சம்பவத்தில், தந்தையுடன் கைதான நிலையில் லியாம் அழுதுகொண்டே நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டு, உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஃப்ரெட் பியரி, அமெரிக்க அரசின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையை கடுமையாகக் கண்டித்தார்.

நீதிபதி பியரி தீர்ப்பில், “நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டியவர்களின் எண்ணிக்கையில் இலக்கை அடைவதற்காக, சிறார்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுவது தவறு. சட்டப்படி திருப்பி அனுப்ப வேண்டியவர்களை மரியாதையான முறையில் நடத்தவேண்டும்” என்று சுட்டிக்காட்டினார். தந்தை-மகன் இருவரும் சட்டபூர்வமாக ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள், தற்போது டெக்சாஸில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!