பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு… மானாமதுரையில் சோகம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் யூகேஜி படித்து வந்த 5 வயது சிறுமி தேஜாஸ்ரீ, இன்று காலை வழக்கம்போல் தனியார் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்ட ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எந்த முன்அறிகுறியும் இல்லாமல் பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

5 வயது குழந்தையின் திடீர் மரணம் மானாமதுரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. பள்ளியில் குழந்தைகளின் உடல்நல பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
