அசத்தல்... 36 வினாடிகளில் 99 தமிழ் மலர்கள்… 5 வயது சிறுவன் உலக சாதனை!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அஜ்மல் – ரூபியாபானு தம்பதி. இவர்களின் மகன் எம்.முகமது ஷாரிக் (5). இச்சிறுவன் கல்பாக்கம் அணுசக்தி மத்திய பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சிறு வயதிலிருந்தே நினைவாற்றல் மற்றும் விரைவாக பதிலளிக்கும் திறனில் சிறந்து விளங்கி வருகிறான். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறான்.
முகமது ஷாரிக் 99 தமிழ் மலர்களின் பெயர்களை வெறும் 36 வினாடிகளில் கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளான். 31 ஆத்திச்சூடி பாடல்கள், 70 திருக்குறள்கள் மற்றும் பாரதியார் பாடல்களையும் மனப்பாடமாக சொல்லுகிறான். இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றையும் துல்லியமாக கூறுகிறான். தமிழகத்தின் 38 மாவட்டங்களின் பெயர்களையும் சரியாக நினைவில் வைத்திருக்கிறான். 24 தேசிய தலைவர்கள் மற்றும் 16 தேசிய சின்னங்களையும் அடையாளம் கண்டு சொல்கிறான்.
தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடல்கள், கதைகளையும் சொல்லும் திறன் அவனுக்கு உள்ளது. விலங்குகள், பறவைகள், காய்கறிகள் மற்றும் பழங்களின் பெயர்களையும் பல மொழிகளில் வகைப்படுத்தி கூறுகிறான். இச்சிறுவனின் திறமையை பாராட்டி ‘ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் உலக சாதனை புத்தகத்தில் பெயரை பதிவு செய்துள்ளது. இந்த சாதனையை பாராட்டி சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
