இன்று சென்னை முழுவதும் 50 கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்... முதல்வா் தொடங்கி வைப்பு!

 
ஏடிஎம் குடிநீர்

சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்  குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.6.04 கோடியில்  50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

ஏடிஎம் குடிநீர்

இந்நிலையில், இந்தக் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஜூன் 18ம் தேதி புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

ஏடிஎம் குடிநீர்

சென்னை மெரீனாவில்  புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார்.  அங்கிருந்தபடியே மாநகரின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் செயல்பாட்டையும் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறாா். இந்நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது