50 ஆடுகள், 150 மூட்டை அரிசி.. சுடச்சுட கறி விருந்து... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழா!

 
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் அப்பகுதியில் பிரசித்திபெற்ற வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடைபெற்றது.

இதில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்ற கட்டுப்பாடு தொடர்கிறது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் ஆடுகளை நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்கினர். இந்தாண்டு விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை ஆண்கள் தொடங்கினர்.

திண்டுக்கல்

பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 150 மூட்டை அரிசியில் சோறு தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது. காலை முதலேநீண்ட வரிசையில் நின்று ஆண்கள் வாங்கிச்சென்றனர்.

திண்டுக்கல்

கறி விருந்தில் புண்ணபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web