ஆந்திராவில் 5 மாவட்டங்களில் 50 மாவோயிஸ்ட்கள் கைது!

 
மாவோயிஸ்டு
 

ஆந்திரப் பிரதேசத்தில் காவல்துறை மற்றும் ஒருங்கிணைந்த உளவுத்துறை இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், ஐந்து மாவட்டங்களில் சுமார் 50 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டம் மாரேடுமில்லியில் நவம்பர் 18ஆம் தேதி நடந்த என்கவுண்டரில் நக்சல் தளபதி ஹித்மா உட்பட ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

நக்சலைட்

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணா, எலுரு, என்டிஆர், காக்கிநாடா, கோனசீமா மாவட்டங்களில் ஒருங்கிணைந்த ரெய்டுகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பு மண்டலக் குழு, பிரிவு, பகுதி குழு உள்ளிட்ட பல நிலைகளில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டதாக ஏடிஜிபி (உளவுத்துறை) மகேஷ் சந்திர லத்தா விஜயவாடாவில் தெரிவித்தார். தொடர்ந்து மாநில புலனாய்வு, சிறப்புப் புலனாய்வு பிரிவு, மாவட்ட காவல் துறைகள் மற்றும் விஜயவாடா ஆணையரகத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நக்சலைட்

சத்தீஸ்கரின் சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர், மேற்கு பஸ்தர் பகுதிகளில் காவல் அழுத்தம் அதிகரித்ததால், சில நக்சல்கள் ஆந்திரத்துக்கு தப்பிச்சென்றதும் அவர்கள் கைது செய்யப்பட்டதும் அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனைகளில் 39 ஆயுதங்கள், 302 தோட்டாக்கள், வெடிகுண்டுப் பொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், ரூ.13 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை மீட்கப்பட்டன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!