வேளாண் பட்ஜெட்.... நாட்டுக் கோழி பண்ணை அமைக்க 50% மானியம்..!
வேளாண் பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள்
ரூ.50.79 கோடி மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.
ரூ.20 கோடி மதிப்பில் 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா உள்ளிட்ட 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.
வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம்.
உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டிற்கு எடுத்து சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு.
சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி” உருவாக்கப்படும்.
63,000 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன் பெரும் வகையில் 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாட்டுக் கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மகளிருக்கு 50% மானியத்துடன் நாட்டுக் கோழி பண்ணைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
