50க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின... பீதியில் மீனவர்கள்!
மாமல்லபுரம் கடல் பகுதியில் இன்று காலை 5 கிமீ தொலைவுக்கு, சுமார் 15 கிலோ எடையுள்ள 50க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தது. இதை காண நடப்ப பயிற்சியில் ஈடுபட்டவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் இதை சுனாமிக்கான எச்சரிக்கையாக கருதி அச்சமடைந்தனர்.

அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் கடலில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை ஏற்படும். அந்த நேரத்தில் கடலில் கலக்கும் நச்சு, குப்பை மற்றும் கப்பல்களில் இருந்து வெளியேறும் ஆயில் கழிவுகளை கடல் ஆமைகள் சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனால் கடல் கரைக்கு ஒதுங்கும் நிலை உருவாகுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தற்போது கடலில் வீசும் சுழற்காற்றும் காரணமாக, இறந்த ஆமைகளை கடல் தாக்க முடியாமல் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த சம்பவம் சுற்றுலா மற்றும் கடல்சார் பயணிகள் மீது தீவிர கவலை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
