500 நவீன இலவச கழிப்பிடங்கள்!! சிங்கார சென்னை 2.0 அதிரடி!!

 
இலவச கழிப்பிடம்

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையை சிங்கார சென்னையாக்க தமிழக அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் 500  கட்டணமில்லா கழிப்பறை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையின் தரத்தை முன்னிலைப்படுத்துதலில் கல்வி, சுகாதாரம் , தரமான சாலைகள், பொது கழிவறைகள்  குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில், சென்னை மாநகரை பொறுத்தவரையில் பொதுமக்கள் தேவைக்கு ஏற்றபடி பொதுக்கழிவறைகள் என்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவீன கழிப்பிடம்

அதன்படி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு கட்டணமில்லா தூய்மையான கழிவறையை கொண்டுவர  சென்னை மாநகராட்சி பணிகளை தொடங்கியுள்ளது.பொது கழிவறை என்றாலே அசுத்தம் என்ற எண்ணம் தான் பொதுமக்களிடயே நிலவி வருகிறது. இதனை மாற்றி  பொது கழிவறை பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.  முதற்கட்டமாக  சென்னை மாநகராட்சியில் , மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 9 பொது கழிப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நவீன கழிப்பிடம்

கழிவறையின் வெளி சுற்றில் ஓவியங்கள், பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சென்றுவர சாய்தள நடைபாதை, தடையில்லா தண்ணீர் விநியோகம் இவைகள் சரியான முறையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன்  கழிவறைகளின் தரம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கவும் அலாரம் பொத்தான்களும் பொறுத்தப்பட உள்ளன. இவை தவிர  நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் இ - டாய்லெட்டுகளையும் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளன. பொது கழிவறைகளை சர்வதேச நாடுகளுக்கு இணையாக கொண்டுவர வேண்டும். அதற்கான  நிலையை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பையும் தமிழக அரசு எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web