கரையோர மக்களுக்கு எச்சரிக்கை... செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கனஅடி உபரி நீர் திறப்பு!
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில், வரலாற்றிலேயே அதிகபட்சமாக நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் கடந்த 12ம் தேதி முதல் வினாடிக்கு 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று மாலை 4 மணி முதல் வினாடிக்கு 500 கனஅடியாக உபரி நீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு வரும் கூடுதல் நீரும் நேரடியாக உபரி நீர் கால்வாயில் விடப்படும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

உபரி நீர் செல்லும் சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாறு ஆற்றின் இருபுற தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
