சொகுசு காரில் 500 கிலோ போதைப்பொருள் கடத்தல்.. வடமாநில இளைஞர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார்!

சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி சுங்கச்சாவடியில் அம்பலூர் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த திலீப் சிங் மற்றும் ரமேஷ் குமார் என்பதும், கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு 500 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, 500 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அம்பலூர் போலீசார், திலீப் சிங் மற்றும் ரமேஷ் குமார் என்ற இரு வடமாநில இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!