இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி... ட்ரம்ப் ஒப்புதல்!

 
மோடி
 

ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்குவது உக்ரைன் போருக்கு மறைமுக நிதியுதவி என டிரம்ப் குற்றம்சாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் இதற்கு உறுதியளித்ததாகவும் அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

ஆனால், இத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதனால் இரு நாடுகளுக்கிடையே பரபரப்பு அதிகரித்தது.

இந்த சூழலில், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்த வாரமே அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!