உலக சாதனை... உத்திரமேரூரில் 500 மாணவிகள் திருப்பாவை நாட்டியம்!

 
உத்திரமேரூர்

மார்கழி மாதத்தை முன்னிட்டு உத்திரமேரூரில் நடைபெற்ற திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ளது. உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் அருகே, நடராஜர் நாட்டியாலயா சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 500 மாணவிகள் ஆண்டாள் வேடமணிந்து குழுவாக திருப்பாவை பாசுரங்களுக்கு பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒருங்கிணைந்த நடன வடிவமைப்புடன் மாணவிகள் அர்ப்பணிப்புடன் ஆடினர். இதுவரை பெரிய பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த திருப்பாவை நாட்டியம், முதல் முறையாக உத்திரமேரூரில் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

இந்த திருப்பாவை நாட்டிய வைபவம், ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாட்டிய ஆசிரியை பொற்கொடி பரத் உலக சாதனை விருதைப் பெற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் உலக சாதனை சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த சாதனை நிகழ்வு உத்திரமேரூருக்கு பெருமை சேர்த்துள்ளதாக பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!