500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்... செந்தில்பாலாஜி அறிவிப்பு சாத்தியமா? வாய் சவடாலா?

 
டாஸ்மாக்

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்கிற அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பு சாத்தியம் தானா? இல்லை வாய் சவடாலா? என்று புலம்புகிறார்கள் மக்கள். தமிழகத்தில் க்ரைம் ரேட் மட்டுமல்லாமல் டாஸ்மாக் மதுபானங்களும் கரைப்புரண்டோடுகிறது. ஆண்கள் மட்டுமே குடித்து வந்த நிலையில், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளும் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். பேருந்து நிலையங்கள், நடுரோட்டில் போலீசாருடன் மது போதையில் சேட்டை என்று வாரத்திற்கு ஒரு வீடியோவாவது இளம்பெண்களும், மாணவிகளும் குடி போதையில் செய்கிற அலம்பல்களாக வெளியாகி கவலையளிக்கிறது. 

இந்நிலையில், சட்டசபையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கையின் பொழுது வெளியிட்ட அறிவிப்புகள் வேறு ரகம்.

டாஸ்மாக்

கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி வழங்கப்படும். (அவனது வருமானத்தைச் சுரண்டி, அவனை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து, பின் அவனது உடல் நலனுக்காக நிதி தரப்படும் என்று சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்)

மதுவுக்கு அடிமையாகாமல் இருக்கவும், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், போதை மருந்துகளைத் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

எரிசாராயம், போலி மதுபானம், மதுபானம் கடத்துதல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து ரகசிய தகவல் தருபவர்களுக்கு வழங்கப்படும். 
இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் டாஸ்மாக் கடைகள் பாதிக்கப்படுகின்றன. அதைக் கண்காணிக்க இந்த நிதியாண்டில் 500 கடைகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

டாஸ்மாக் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு வழங்கி வரும் குடும்ப நல நிதியுதவித் தொகை ரூபாய் 3 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்படும்.
இந்த நிதியாண்டில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் பணப் பாதுகாப்பு பெட்டகங்கள் உயர்த்தி வழங்கப்படும். இத் தொகை ரூபாய் 15 லட்சத்தில் இருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 1100, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 930, உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 840 மாதம் தோறும் கூடுதலாக வழங்கப்படும்.

தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் தகுதியான 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு இருக்கிறார். ஆண்டுக்கு ஆண்டு வருமானம் கொழித்துக்கொண்டிருக்க எப்படி கடைகளை மூடுவார்கள் அப்படி மூடினால் அங்கே பணியில் இருப்பவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க என்ன நடவடிக்கை என விளக்கவில்லை என மில்லியன் டாலர் கேள்விகளை கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web