மாணவர்களுக்கு மாதம் ரூ. 50,000 ஆராய்ச்சி உதவித் தொகை... எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு அரசு, தமிழ் சமூகத்தின் பெருமைமிகு வரலாற்றை வெளிக்கொணரும் நோக்கில், ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் ரூ. 50,000 உதவித் தொகையுடன் ஓராண்டு ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அரசு தற்போது ஏற்கிறது.இந்த திட்டத்தின் கீழ், முதுகலை பட்டதாரிகள் மற்றும் தனிநபர் ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் (Tamil Nadu Archives) உள்ள பழமையான ஆவணங்களை ஆராய்ந்து வரலாற்றுப் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொள்ளலாம். 1633 முதல் 1670ஆம் ஆண்டு வரை உள்ள முக்கிய ஆவணங்கள் காப்பகம் பராமரித்து வருகிறது. “மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த காப்பகம் 1909 முதல் தற்போதுள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் கடந்த காலத்தில் தொடங்கப்பட்டு, புதிய காலத்திற்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும், இதற்காக 20 நபர்களுக்கு மாதம் ரூ. 50,000 ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை வெளிக்கொண்டு, புதிய அறிவைப் பெற முடியும். ஆராய்ச்சி ஓராண்டு காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tamilnaduarchives.tn.gov.in (http://www.tamilnaduarchives.tn.gov.in) இல் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து 28.11.2025 வரை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியிலேயே ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாடு வரலாற்றில் முக்கிய பங்களிப்பைச் செய்ய முடியும். அரசு, விரும்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு முழு ஆதரவுடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
