ம்ம்... அதெல்லாம் காமராஜர் காலம்... மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் பள்ளிக் கல்வித்துறை! சுயநலத்தோடு ஆசிரியர்கள்!

 
தேர்வு

ஆசிரியர்கள் சுயநலத்தோடு என்கிற தலைப்பைப் படித்ததும் கமெண்ட்ல பொங்கி எழுகிறார்கள். ஆனால், நிஜமாகவே மனசாட்சியோடு ஆசிரியர்கள் பயணிக்க, பணியாற்ற வேண்டிய காலம் இது. சமீபமாய் ஒவ்வொரு வருடமும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருக்கின்றனர். இதற்கான முழு பொறுப்பும் ஆசிரியர்களைத் தானே சேரும்.

வருடம் முழுக்க வகுப்பறையில் படித்த மாணவர்கள் தேர்வெழுத வரவில்லையெனில், எதிர்பாராத விபத்து, சூழ்நிலை போன்ற காரணங்களால் வராத மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை சொற்பம் தானே? குடும்ப சூழல் போன்றவைகளினால் பாதிக்கப்படுகிற மாணவர்களின் எதிர்காலத்தை பள்ளி ஆசிரியர்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும். பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பெற்றோர்கள் படிக்க அனுப்ப வேண்டும் என்பதற்காக ஒரு தலைமுறை அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களும் உழைத்தார்கள். இதற்கான முன்னெடுப்பை தமிழக முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் முழு மூச்சாக நினைத்து செயல்படுத்தினார். அதன் பிறகு ஆள்கின்ற கழக அரசுகள், தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமே கம்பீரமாக அறிவிக்கிறதே தவிர, அடுத்து வரும் வருடங்களிலாவது இதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்துக்கும் அரசு தானே பொறுப்பு?

தமிழகம் முழுவதும் நேற்று மார்ச் 13ம் தேதி  திங்கட்கிழமை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்கிய முதல்  நாளே, தமிழ் மொழி தேர்வை 50674 பேர் எழுதவில்லை. தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 8.51 லட்சம் நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று  திங்கட்கிழமை நடைபெற்ற முதல் மொழி தேர்வை 50000க்கும் அதிகமானோர்  எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் நேற்று 12 ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் 3225 தேர்வு மையங்களில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெறும். இதில் அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 819 மாணவர்கள் இந்த தேர்வை எழுதவுள்ளனர். அதே போல் வணிகவியல் பாடப் பிரிவில் மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 45 மாணவர்களும், கலை பாடப்பிரிவில் 14 ஆயிரத்து 162 மாணவர்கள், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 46 ஆயிரத்து 277 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர்.அந்தவகையில் சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45 ஆயிரத்து 982 பேர்களூம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தேர்வுத் துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுமையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதே போல், தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மேலும், தேர்வு மையத்துக்குள் தேர்வர்களும், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்போன் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 4,235 எண்ணிக்கையில் பறக்கும் படை குழுக்கள், முதன்மை கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொது மக்கள் தங்களது புகார்கள், கருத்துகளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் 9498383081, 9498383075 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தேர்வில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

பொதுத்தேர்வு

பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளில் உள்ள தேர்வு மையத்திலும் சிறைவாசிகள் எழுதுகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் தரை தளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்க அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web