51 கிடா வெட்டி மீன் வளம் வேண்டி மீனவர்கள் சிறப்பு வழிபாடு!

 
கோடியக்கரை
 


 
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் 1,000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில் 60 விசைப்படகுகள், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தினமும்  வங்களா விரிகுடா, பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

வங்களா விரிகுடாவும், பாக்ஜலசந்தியும் சந்திக்கும் இடமான கோடியக்காடு பகுதியில்  சேர்வராயன் கோயிலில் மீன் வளம் வேண்டி  மீனவர்கள் மீன் பிடிக்க செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும்  தங்களது காவல் தெய்வமாக இந்த கோவிலை வழிபட்டு வரும் நிலையில் இங்கு  ஆண்டுதோறும் மீனவர்கள் கிடா வெட்டி பூஜை செய்வர்.

மீனவர்கள்
அந்த வகையில்  கோடியக்காட்டில் உள்ள சேர்வராயன் கோயிலில் கிடா வெட்டு நிகழ்ச்சியில் நேற்று  ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் ஒன்று சேர்ந்து 51 கிடா வெட்டி சமைத்து சுவாமிக்கு பூஜை செய்தனர். பின்னர் மீனவர்கள் அனைவருக்கும்  கறி விருந்து பரிமாறப்பட்டது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது