அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்… ஈரான் போராட்டத்தில் 51 பேர் பலி!

 
ஈரான்
 

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு காரணமாக உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. கமேனி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு, அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

ஈரான் இஸ்ரேல்

போராட்டத்தை ஒடுக்க கமேனி தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நிலக்கரி சுரங்கம் தீ

இந்த போராட்டத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 21 பாதுகாப்புப் படையினரும், 9 குழந்தைகளும் அடங்குவர் என தகவல் தெரிவிக்கிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் நிலைமை நாளுக்கு நாள் பதற்றமாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!