ஈரானில் 5.1 ரிக்டரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... அணு ஆயுத சோதனையா? பதறும் உலக நாடுகள்!

ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே போர்ப்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஈரானுக்கு தான் பாதிப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இருநாடுகளும் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், வடக்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மற்றொரு நிலநடுக்கம், செம்னான் மாகாணத்தில் இருந்து 22 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இங்கு தான் விண்வெளி மையம் மற்றும் ஏவுகணை வளாகம் அமைந்துள்ளது. மேலும், அதன் அதிர்வுகள் சோர்கே நகரைச் சுற்றிலும் உணரப்பட்டு உள்ளது.
சோர்கே நகரம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 150 கி.மீ., தொலைவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களினால் சேதம், உயிர்ப்பலி, பாதிப்பு குறித்த இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. திடீரென அடுத்தடுத்து ஏற்பட்டு இருக்க கூடிய நிலநடுக்கத்தால் அணு ஆயுத சோதனை எதுவும் நடத்தபட்டதா என்ற சந்தேகங்களும் எழுப்பபட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!