இந்தியா வரும் 54000 டன் எரிவாயு... ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல்!
மேற்கு ஆசிய பகுதியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தியக் கொடியுடன் கூடிய எல்பிஜி சரக்கு கப்பல் “சிவாலிக்” ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வணிகக் கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்கும் இணையதளத்தின் தகவலின்படி, 54 ஆயிரம் டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல் மார்ச் 13 இரவு அந்தப் பகுதியை கடந்தது.

இந்த கப்பல் மார்ச் 7 அன்று கத்தாரின் ராஸ் லஃபான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த இந்த கப்பல் இந்திய கப்பல் கழகத்திற்கு சொந்தமானது. கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக வழிநடத்துகின்றன என்ற தகவலை இந்திய கடற்படை மறுத்துள்ளது.

மேற்கு ஆசிய மோதல் தொடங்கிய பிறகு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கியிருந்த இந்தியக் கொடியுடன் கூடிய பல கப்பல்களில் “சிவாலிக்” கப்பலும் ஒன்று. தற்போது சில கப்பல்கள் நகரத் தொடங்கியுள்ள நிலையில் இன்னும் பல கப்பல்கள் அந்த பகுதியில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை காரணமாக கடல்சார் போக்குவரத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
