புத்தாண்டு தினத்தில் தமிழ்நாடு முழுவதும் 545 குழந்தைகள் பிறப்பு!
2026 புத்தாண்டு தினத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண்டின் முதல் நாளில் பிறந்த இந்தக் குழந்தைகள் அனைவரும் புத்தாண்டுடன் பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாடும் மகிழ்ச்சியை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
சென்னையில் மட்டும் 46 குழந்தைகள் பிறந்தன. இதில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 21 குழந்தைகள் பிறந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மருத்துவர்கள் குழந்தைகளை கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயபுரம் அரசு மருத்துவமனைகளிலும் புத்தாண்டு குழந்தைகள் பிறந்தன.
மாவட்டங்களிலும் புத்தாண்டு பிஞ்சுகள் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. தென்காசியில் 20, கள்ளக்குறிச்சியில் 47, விழுப்புரத்தில் 27, திருவண்ணாமலையில் 22 குழந்தைகள் பிறந்தன. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் கேட்கப்பட்ட இந்த பிஞ்சுக் குரல்கள், புத்தாண்டுக்கு இனிய தொடக்கமாக அமைந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
