தமிழ்நாடு முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள், பல்வேறு துரை செயல்பர்கள் உள்பட 55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி
திருச்சி மாநகராட்சி ஆணையாளராக இருந்த வே.சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
திருப்பூர் ஆட்சியராக நாரணவரே மனீஷ் ஷங்கர்ராவ், பெரம்பலூர் ஆட்சியராக அருள்ராஜ் நியமனம்.
செங்கல்பட்டு ஆட்சியராக சினேகா, மதுரை ஆட்சியராக கே.ஜே.பிரவீன் குமார் நியமனம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சிகப்புத்ரா ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி நியமனம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி நியமனம்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளராக கோ.பிரகாஷ் நியமனம்.
வணிகவரி ஆணையராக எஸ். நாகராஜன் நியமனம்
திருப்பூர் ஆணையராக எம்.பி.அமித், நெல்லை ஆணையராக மோனிகா ராணா நியமனம்.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் , ஓசூர் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்.
உயர்கல்வித்துறை செயலாளராக சங்கர் ஐஏஎஸ் நியமனம்
வணிகவரி பதிவுத்துறை அரசு செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் இடமாற்றம்.
போக்குவரத்து துறை செயலாளராக லில்லி , நிதித்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம்.
மனித வள மேலாண்மை துறை அரசு செயலாளராக சமயமூர்த்தி ஐஏஎஸ் இடம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!