பணி நிரந்தரம் கோரி 550 நர்சுகள் உண்ணாவிரதம்.... சென்னையில் பரபரப்பு!

 
நர்சுகள்
 

எம்.ஆர்.பி. நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி. நர்சுகள் பங்கேற்று, கோரிக்கை பதாகைகளுடன் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சங்கத் தலைவர் சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் சுபின், மாவட்ட தலைவர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் சுபின், “2015-ல் வழங்கப்பட்ட நியமன ஆணைப்படி 2 ஆண்டுகள் தொகுப்பூதிய பணிக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்கள் போராட்டங்களில் பங்கேற்ற தற்போதைய முதல்வர், ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார். ஆனால் ஆட்சிக் காலம் முடியும் நிலையில் கூட வாக்குறுதிகள் காற்றாகிவிட்டன” என்று குற்றம்சாட்டினார்.

மாலை நேரத்தில் போராட்டத்தை கலைக்க போலீசார் அறிவுறுத்தியபோதும் நர்சுகள் மறுத்ததால், 550 பேரை கைது செய்து பேருந்துகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கினர். அங்கும் போராட்டம் தொடர்ந்ததால், பஸ் நிலையம் பரபரப்புக்குள்ளானது. இதையடுத்து போலீசார் நர்சுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!