வார இறுதி விடுமுறை… தமிழகம் முழுவதும் 550 சிறப்பு பேருந்துகள்!
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்ல மக்கள் அதிகம் திட்டமிட்டு வருகின்றனர். இதையடுத்து சனி, ஞாயிறு விடுமுறையைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இயந்திரமயமான வாழ்க்கையில் ஓய்வெடுக்க இந்த விடுமுறையை பலரும் பயன்படுத்த உள்ளனர்.

நாளை 19, 20, 21 தேதிகளில் கூடுதல் பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு இரண்டு நாட்களில் 55 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு 19ம் தேதி 240 பேருந்துகளும், 20ம் தேதி 255 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மாதவரத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்ய போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
