56 அடி உயர முருகன் சிலை பிரதிஷ்டை!

 
murugan

சேலம் மாவட்ட தாரமங்கலம் அருகேயுள்ள அணைமேடு திருக்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த ராஜ முருகன் சிலை திட்டம் இறுதியாக கண்ணுக்கு காட்சியாகியுள்ளது. ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட சிலையின் வடிவமைப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியதால், கோவில் நிர்வாகம் புதிய வடிவமைப்பில் மாற்றியமைத்து giant சிலையை மறுபடியும் உருவாக்க முடிவெடுத்தது. அதன் படி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடந்த பணிகள் தற்போது சிறப்பாக நிறைவு பெற்றுள்ளன.

மொத்தம் 56 அடி உயரத்தில் கம்பீரமாக எழுந்திருக்கும் ராஜ முருகன் சிலை, அணைமேடு கோவிலின் முகத்துவாரமே மாற்றி எழுப்பும் அளவுக்கு majestic தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டை முடிக்கப்பட்டதும், இடம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது. சூரிய ஒளியில் பொலிவெடுத்து நின்ற சிலையை பார்த்து பக்தர்கள் பெருமிதம் அடைந்தனர்.

புதிய சிலை பிரதிஷ்டை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணைமேடு கோவிலுக்கு திரண்டு வந்து முருகனை தரிசித்து அருள்பெற்றனர். நீண்ட நாளாக காத்திருந்த சிலை இப்போது கம்பீரமாக எழுந்திருப்பதை நேரில் கண்ட பக்தர்கள், “இது பக்தி உணர்வுக்கு புதிய உயிரூட்டம் அளிக்கிறது,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!