ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுதலை… மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
ஜல்லிக்கட்டு
 

2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் தொடர்பான வழக்கில் 57 பேரை மதுரை மாவட்ட நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இதில் 8 பெண்கள் உட்பட அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாகக் கூறி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து 57 பேரும் முழுமையாக விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!