5,757 காளைகள் தயார்... இன்று பாலமேடு ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

 
ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரத்தை உலகிற்குப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுத் திருவிழா, மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் களைகட்டியுள்ளது. நேற்று அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடந்த போட்டியைத் தொடர்ந்து, இன்று பாலமேடு வாடிவாசல் திறக்கப்படத் தயார் நிலையில் உள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்னும் சற்று நேரத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக மதுரை வந்துள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்க உள்ளனர்.

ஜல்லிக்கட்டு

இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன: பதிவு செய்யப்பட்ட காளைகள்: 5,757 பதிவு செய்த வீரர்கள்: 1,913. இந்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தகுதியானவர்கள் மட்டுமே வாடிவாசலில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு

இந்தப் பகுதியில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அமரும் மாடம் ஆகியவை மிக வலுவாக அமைக்கப்பட்டுள்ளன. காளைகள் ஓடும் பாதையில் பார்வையாளர்கள் யாரும் நுழையாதவாறு இரண்டு அடுக்கு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் கார், பைக், தங்கக் காசுகள் எனப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் காத்திருக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!