விஜய் மல்லையா உட்பட நாட்டை விட்டு ஓடிய 15 பேரால் ₹58,082 கோடி இழப்பு... மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
நாட்டைவிட்டு தப்பிச் சென்ற 15 முக்கிய பொருளாதார குற்றவாளிகளால் அரசு வங்கிகள் மொத்தம் ₹58,082 கோடி இழந்துள்ளன என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட இந்த பதில் கவனம் ஈர்த்துள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018–ன் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்பிஐ, யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 12 அரசு வங்கிகளுக்கு ரூ.26,645 கோடி அசல் தொகையும், ரூ.31,437 கோடி வட்டியும் — மொத்தம் ₹58,082 கோடி — செலுத்த வேண்டியிருக்கிறது என அரசின் பதில் கூறுகிறது.

இவர்களிடம் இருந்து இதுவரை சுமார் ₹19,187 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது மொத்த இழப்புத் தொகையின் 33 சதவீதம் ஆகும். தப்பியோடியவர்களில் இருவர் தற்போது வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களிடம் இருந்து பணத்தை மீட்டெடுக்க சொத்து பறிமுதல், நாடு கடத்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
